திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (13:28 IST)

சிம்மம்: ஆவணி மாத ராசி பலன்கள்

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) - பலன்: கஷ்டமில்லா சுக வாழ்க்கை வாழ ஆசைப்படும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம்  மூலம் ஆதாயம் உண்டாகும். பண வரத்து கூடும்.
தொழில் மூலம் உண்டாகும் செலவுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆனால் அவர்களிடம் திறமையாக பேசி தக்க  வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் தொழில் போன்றவற்றை விரிவாக்கம் செய்ய புது திட்டங்களை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புது தொழிலில் முதலீடு  செய்யும் போது கவனம் தேவை.
 
குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். கஷ்டமில்லா சுக வாழ்க்கை இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும்  கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும்.
 
பெண்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகும். மன மகிழ்ச்சி உண்டாகும்.
 
கலைத்துறையினருக்கு எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தன்னம்பிக்கை ஏற்படும். வீண்  அலைச்சலை சந்திக்க வேண்டி வரும்.
 
அரசியல்துறையினருக்கு எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவு உண்டாக்கும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எல்லா  முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும்.
 
மகம்:
 
இந்த மாதம் உடல் நலத்தையும், மனவளத்தையும்  பெருக்கிக்கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளை தங்கள்  அருகில்  வைத்துக் கொண்டு காரியமாற்றி  நலமடைவார்கள். வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி   பெறுவீர்கள்.
 
பூரம்:
 
இந்த மாதம் மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள்  வியாபாரத்தை  விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை வீழ்த்துவதற்குண்டான பாதைகளை வகுத்துக் கொள்வீர்கள்.
 
உத்திரம் 1ம் பாதம்:
 
இந்த மாதம்  குடும்பத்தில் உங்கள் அணுகுமுறை இருக்கும். குடும்பத்தாருடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொண்டு   மகிழ்வீர்கள்.  சகோதர, சகோதரிகளிடம்  விட்டுக் கொடுத்துப் பழகவும். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு மாட்டிக் கொள்ள   நேரிடலாம்.  அசையாச்சொத்துக்களை நல்ல  விலைக்கு விற்று லாபமடையும் .
 
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்குவதன் மூலம் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்.
சந்திராஷ்டம தினங்கள்:  ஆகஸ்டு 19, 20; செப்டம்பர் 15, 16.
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 8, 9.